அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள்! சுசில் பிரேமஜெயந்த நம்பிக்கை

அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல. சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என நினைக்கிறார்கள்.

அவ்வாறு செய்ய முடியாது என்பது கடந்த இரண்டு வருடத்துக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் இது தொடர்பில் சிந்தித்து சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அடுத்த வருடம் பிரதான இரண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறும். மக்கள் சரியாக தீர்மானிக்கிறார்கள் என நினைக்கிறேன். போதிய முன் அனுபவம் இல்லாமல் துறைசார்ந்த முதிர்ச்சி ஒன்றுமில்லாமல் இந்த துறையில் பணியாற்ற முடியாது.

இவ்வாறானவர்களின் தலைமைத்துவத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.

நகரசபை மற்றும் மாநகர சபைகளில் கூட என்ன நடக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் நிலவில் முயல் பார்ப்பதை போன்றே செயற்படுவார்கள்.

அவ்வாறான தரப்பினரே நாட்டில் காணப்படும் உயரிய பதவிகளை வகிப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நபர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் எத்தனை நாள்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

நாடாளுமன்றத்தில் தமது கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத ஒருவரால் எவ்வாறு உயரிய பதவிகளை பெற்றுக் கொண்டு அதனை திறம்பட செய்ய முடியும். அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல.

மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என நினைக்கிறார்கள்.

அவ்வாறு செய்ய முடியாது என்பது கடந்த இரண்டு வருடத்துக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே மக்கள் இது தொடர்பில் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்வார்கள். மக்கள் சரியாக தீர்மானிக்கிறார்கள் என நினைக்கிறேன். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.