அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 51,967 மி.ரூபா செலவிடப்பட்டுள்ளது! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கமைய பயனாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிறைவமைந்த ஐந்து மாதகாலப்பகுதியில் மாத்திரம் 51,967 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்தமாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கமைய 14,10064 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளர்களுக்கு டிசெம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய டிசெம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகளுக்காக 8793 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கமைய கடந்த ஜூலை மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 51,967 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழித்துள்ளது.

அதி தீவிர ஏழ்மை நிலையில் உள்ள 303199 குடும்பங்களுக்கும், ஏழ்மை நிலையில் உள்ள 606496 குடும்பங்களுக்கும், ஏழ்மை அவதான நிலையில் உள்ள 290624 குடும்பங்களுக்கும், 209748 இடைநிலை குடும்பங்களுக்கும்  இதுவரையான காலப்பகுதியில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.