அரசியல் ஸ்தீரத் தன்மையை வரிக்கொள்கை பலவீனமாக்கும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டு

2023 ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு பிரச்சினைகள் தீவிரமடையும். அரசாங்கத்தில் வரி கொள்கை அரசியல் ஸ்தீரத்தை பலவீனப்படுத்தும். மக்கள் போராட்டங்கள் தலைதூக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமையவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள்.வரி தொடர்பில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்துக்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி விட்டு வரி அதிகரிப்புக்கு நாங்கள்  எதிர்ப்பு என்று மக்கள் மத்தியில் குறிப்பிடுகிறார்கள்.

வரி அதிகரிப்பைத் தவிர எவ்வித திட்டங்களையும் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆனால் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.

முறையற்ற வகையில் வற் வரி உட்பட சகல வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டை காட்டிலும் அடுத்த ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும்.வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்.மக்கள் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.வரி கொள்கை அடுத்த ஆண்டு அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.