சட்டத்தரணிகள் சங்கத்துக்கு டிரான் அலஸ் வழங்கிய பதில்

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் சம்பந்தமாக என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், யதார்த்தமான விடயத்தையே வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அக்கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, அக்கருத்து தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எந்தவொரு நபர் சார்பாகவும் ஆஜராகுவதற்கு சட்டத்தரணி ஒருவருக்கு உரிமை உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் சட்டத்தரணிகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் மேற்படி சுட்டிக்காட்டல் தொடர்பில் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், என்னைப்பொறுத்தவரையில் நான் வெளிப்படுத்திய கருத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஒருசில சட்டத்திரணிகளின் நிலைமைகளை மையப்படுத்தி யதார்த்தமான கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளேன். ஆகவே அந்தக் கருத்துக்கள் தொடர்பில் தவறுகள் காணப்படுவதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், குறித்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க இதுவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னுடன் கலந்துரையாடவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.