வடக்கு மக்கள் கொவிட்டுக்கு அஞ்சவேண்டாம் ; டெங்கு தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்! வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவிப்பு

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதால், டெங்கு  தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாள்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன.

தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

எனவே வடமாகாண மக்கள் கொரோனாத் தொற்று தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.