மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் அதிபர்கள் போராட்டம்! யாழில் நடந்தது

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக  தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வடமாகாண யாழ்ப்பாண மாவட்ட அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் கவனவீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தனவால் எட்டு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கையளிக்கப்பட்டது.

அதில் இலங்கை  அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிபர் தரத்தினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமாகாண  ஆளுநர் அலுவலகத்திலும் மகஜரையும் கையளித்தனர் என இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.