ரயில், ஓட்டோ கட்டணங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்! அமைச்சர் பந்துல தகவல்

போக்குவரத்துத் துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

ரயில், ஓட்டோ மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளேன்.

இதன்மூலம் நியாயமான விலைக் கொள்கையை அங்கு ஏற்படுத்த முடியும். – இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.