யுக்திய நடவடிக்கையால் தந்தையும் தாயும் கைது பிள்ளைகள் பாதள உலகுடன் இணையும் ஆபத்து! சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதள உலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர். இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதள உலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது  எனத் தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியலில் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது. பொலிஸார் இவ்வாறான கட்டடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம்  கட்டப்பட்டது எனத் தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.