பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பதவி காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்த இதுவரை காலமும் ஆற்றிய பங்களிப்புக்காக நியூஸிலாந்து உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே நியூஸிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரும் இதன்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்க அளவு மீண்டுள்ளதாகவும் 3 வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வருகை தந்த போது நாடு கொவிட் தொற்றால் முடக்கப்பட்டிருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தாம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த நியூஸிலாந்து உயர்தானிகர்இ தற்போதைய அரசாங்கம் நெருக்கடிகளை முறையாக முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

தாம் பதவியில் இருந்த காலப்பகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து சந்தர்ப்பங்களிலும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கினார் எனவும் இதன்போது அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கும் இலங்கை முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்இ கடன் மறுசீரமைப்புஇ வர்த்தகம்இ முதலீடுகள் மற்றும் தேர்தல் தொடர்பான திருத்தங்கள் சம்பந்தமாகவும் இதன்போது இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.