நோவா ஸ்கொட்டியாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ!

நோவா ஸ்கொட்டியா, ஹலிஃபாக்ஸுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் விமல் ரன்கடுவ நோவா ஸ்கொட்டியா மாகாணத்துக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கான நியமனக்கடிதம் கனடாவுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் அன்ஸுல் பானு ஜானினால் வியாழக்கிழமை விமல் ரன்கடுவவிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கொன்சியூலர் சேவையை வழங்குவதற்கு அப்பால் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்துவது குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவேண்டுமென பதில் உயர்ஸ்தானிகர் அன்ஸுல் பானு ஜான் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காண்பித்த அவர், கனேடிய விவசாய உற்பத்திகளைக் கொண்டுசெல்வதற்குரிய கப்பல் போக்குவரத்து மத்திய நிலையமாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இலங்கைக்கு இருக்கின்றன எனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் விமல் ரன்கடுவ, கனடாவின் மிகமுக்கிய துறைமுகமான ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தை இலங்கை துறைமுகங்களுடன் தொடர்புபடுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராயவேண்டும். – என்றார்.

அதுமாத்திரமன்றி நோவா ஸ்கொட்டியாவில் வாழும் இலங்கையர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்கும், அதன்மூலம் அவர்களுக்கு அவசியமான கொன்சியூலர் சேவையை செயற்திறன்மிக்க விதத்திலும் வழங்குவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.