அரகலய போராட்டம் தொடர்பாக தந்தை பெருமிதமடைந்திருப்பார்! லசந்தவின் பிள்ளைகள் கூறுகின்றனர்

எங்கள் தந்தை அரகலய போராட்டம் குறித்து பெருமிதம் அடைந்திருப்பார் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் அவரது நினைவேந்தல் நிகழ்வில் வாசிக்கப்பட்ட செய்தியில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உணர்வுகளை உலுக்கிய சமாதானம் மற்றும்  ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் இதயங்களை நொருக்கிய தீர்க்ககரமான இழப்பின் போது  15 வருடங்களிற்கு முன்னர் எங்கள் தந்தை லசந்தவிக்கிரமதுங்க ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

எங்கள் தந்தை அமைதியை சமாதானத்தை ஏற்படுத்துபவர் மாற்றத்திற்கான வீரமிக்க போராளி.

இன்று அவரின் பெயர் மனித உரிமைகள் பத்திரிகை சுதந்திரம்  சமூகநீதி மற்றும் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்துடன் அடையாளம் காணப்படும் பெயராக மாறியுள்ளது.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அவரை அன்புள்ள அர்ப்பணிப்புமிக்க தந்தையாக மாத்திரம் அறிந்துள்ளோம், எங்கள் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த எங்களின் ஆதரவு அமைப்பு-ஏனையவர்களிற்காக உயிர்வாழ்ந்தவர்.

எங்கள் குடும்பம் ஒன்றாக கூடும் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் அவருக்காக துயருகின்றோம், எங்கள் மேசையில் ஒரு காலியான ஆசனம் எப்போதும் காணப்படுகின்றது.

அவரின் மறைவிற்கு பின்னர் இலங்கை எதிர்கொண்ட இருள்மயமான ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் அவரின் இழப்பை உணர்ந்துள்ளோம்.

எங்கள் தந்தை அரகலய குறித்தும் அவரது செய்தியின் அடிப்படையில் உணர்வுகளின் அடிப்படையில் செயற்பட்டவர்கள் குறித்தும் தங்;கள் உயிர்களிற்கான ஆபத்தை பொருட்படுத்தாமல் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் குறித்தும்  பெருமிதம் அடைந்திருப்பார்.

எங்கள் தந்தையைத் தொடர்ந்தும் நேசிப்பவர்களிற்கும் நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களிற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்கள் தந்தை இன்று இல்லாதபோதிலும் எங்கள்துயரத்தையும் எங்கள் சீற்றத்தையும் அர்த்தபூர்வமான செயற்பாடாக மாற்றி இன்னமும் பூர்த்தி நிறைவேற்றப்படாமலிருக்கின்ற அவரின் நோக்கங்களை நிறைவுசெய்வோம்.

எங்கள் தந்தையை கௌரவிப்போம் எங்கள் தாய்நாட்டில்  வெளிப்படைதன்மை, பக்கச்சார்பின்மை, சகிப்புதன்மை, சுதந்திரம் ஆகியவை குறித்த அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.