விவசாயத் துறை மறுமலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்த நடவடிக்கை!

நாட்டில் விவசாயத் துறையின் மறுமலர்ச்சியைத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மை மற்றும் கமத்தொழில் அமைச்சு ஆகியன பங்குதாரர்களாகின்றன.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மையினூடாக இலங்கை கமத்தொழில் அமைச்சுடன் இணைந்து 9.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நெல் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், குறு நிலத்தில் பயிர்களை பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அம்பாந்தோட்டை, வவுனியா, அனுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 10,000 விவசாயிகள் பயனடையும் வகையில் சிறிய நெல் விவசாயிகளுக்கு ஆதரவாக யுஎஸ்எயிட் நான்கு வருடங்களுக்கு நிதியளிக்கிறது.

எவ்.ஏ.கியு மற்றும் அமைச்சு ஆகியவை விவசாயிகளுக்கு 1,250 ஹெக்டேர் நெல் நிலங்களை சிறுபோகப் பயிர்ச்செய்கை காலத்தில் பயன்படுத்தி பொருத்தமான பயிர்களை விளைவிக்க உதவும்.

அதற்கு மேலதிகமாக 5,000 ஏக்கர் நெற்பயிர்களில் விவசாயிகள் நீர் மற்றும் உரம் போன்ற வளங்களை மிகவும் விளைதிறனாகப் பயன்படுத்த இந்த நடவடிக்கை உதவும். உரிய நேரத்தில் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நெறிப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளை நிறுவவும் இந்த நிதி உதவும்.

2022 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நன்கொடையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நாட்டின் பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியின் போது எவ்.ஏ.கியு மற்றும் அமைச்சு ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 36,000 மெற்றிக் தொன் டிரிபிள் சூப்பர் பொசுபேற்று மற்றும் 9,800 மெட்ரிக் தொன் யூரியாவினை விநியோகித்தது.

இத்துறை புத்துயிர் பெறுவதற்கான அர்ப்பணிப்பிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,

‘கடந்த சில வருடங்களாக எமது நெல் விவசாயிகள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளனர்’ எனவும் தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையின் போது ‘யுஎஸ்எயிட் மற்றும் எவ்.ஏ.கியு ஆகியன நாட்டின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்களை இலவசமாக வழங்கியதோடு இந்த முயற்சியானது இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நெல் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானத்தை அதிகரிப்பதை உறுதி செய்வதற்கான ஆதரவை வழங்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

‘குயுழு மற்றும் கமத்தொழில் அமைச்சுடனான எங்கள் கூட்டாண்மையை தொடர்வதில் ருளுயுஐனு பெருமிதம் கொள்கிறது என ருளுயுஐனு இன் தூதரகப் பணிப்பாளர் கிராவ் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.