அலவிமௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமிக்க என்றும் ,டமளிக்கக்கூடாது சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை

அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது. அதனால் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து சனசமூக நிலையத்தை அந்த பிரதேச மக்கள் பயன்படுத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலவவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

கொழும்பு 10 சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அலவி மௌலானா சனசமூக நிலையம்  முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் பலவந்தமாக ஆக்கிரிமிக்கப்பட்டிருக்கிறது.

சனசமூக நிலையம் பொது மக்களின் நலனோம்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டடம் என்பது யாரும் அறிந்த விடயம். இந்த கட்டடம் மாகாணசபைக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத்துக்கு கீழே இருந்து வருகிறது.

கொழும்பு மாநகரசபைக்கு கீழ் இருந்து வரும் அலவிமௌலானா சனசமூக நிலையம் அமைந்துள்ள பூமி,  முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவின் தலையீட்டினால் மதில், நுழைவாயில் அமைத்து அதனை பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த சனசமூக நிலையம் அந்த பிரதேசத்தில்  வருமானம் குறைந்த மக்களின் விழாக்களுக்காக குறைந்த கட்டணத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலைய பூமி பிரதேசம் முன்னாள் மாநகர சபை உறுப்பினரின் தலையீட்டினால் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக மாநகர ஆணையாளர் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளபோதும் அதற்கு கித்சிறி ராஜபக்ஷ தலையீடு செய்துள்ளார்.

அதேபோன்று ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாக இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

எனவே அலவிமௌலானா சனசமூக நிலையத்தை யாருக்கும் ஆக்கிரமிக்க இடமளிக்காமல் வசதி குறைந்த அந்த பிரதேச மக்களின் நலனோம்புகளுக்காக மீண்டும் பயன்படுத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.