துறைமுகத்துக்கு சென்றதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன்! திஸ்ஸ குட்டியராச்சி களிப்பில்

பொருளாதாரப் பாதிப்பால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது. இருப்பினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்குத் தயாராகவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் உள்ளோம்.ஆனால் பொருளாதார பாதிப்பால் மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு அரசியல் தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உண்டு.

வரலாற்று காலங்களில் அரசியல் ரீதியில்  நாட்டு மக்கள் எடுத்த தீர்மானங்களை கொண்டு இந்த அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த  முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க  மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

மூடிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜயவர்தனா தலைமையில் அரசாங்கத்தைத் தோற்றுவித்தனர்.

ஜே.ஆர்.ஜயவர்தன மூடிய பொருளாதாரத்தை இரத்து செய்து திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.நாட்டு மக்கள்  பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.

ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் துறைமுகத்துக்கு சென்றமை தற்போது பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது. பொருளாதாரப் பாதிப்பு என்பதால் அழுது கொண்டிருக்க முடியாது.

மகிழ்வுடன் இருக்க வேண்டும்.துறைமுகதத்துக்கு சென்றதால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.