மேற்குலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் வந்தாலும் உக்ரைன் விவகாரத்தில் நடுநிலைமை பேணவேண்டும் ரஸ்ய தூதுவர் தெரிவிப்பு

மேற்குலக நாடுகளிடமிருந்து இலங்கை அழுத்தங்களை எதிர்கொள்கின்ற போதிலும் உக்ரைன் விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை நடுநிலைமையை பேணவேண்டும் என ரஸ்யா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது

பேட்டியொன்றில் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன்  ஜகர்யான் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி: பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது உக்ரைன் ரஸ்ய மோதல் இடம்பெறும் சூழமைவில் மேற்கு ஆசியாவில் நெருக்கடி காணப்படும் சூழமைவில்  முன்வைக்கப்படுகின்றது.  ஆகவே இலங்கையுடன் எந்தவகையான பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணுவவதற்கு  ரஸ்யா விரும்புகின்றது?

பதில்: முதலில் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன். எங்களைப் பொறுத்தவரை இது ரஸ்ய உக்ரைன் யுத்தம் இல்லை.இது ரஸ்யா ஆரம்பித்துள்ள விசேட நடவடிக்கை.

இது ரஸ்யாவிற்கும்  மேற்குலகிற்கும் இடையில் உக்ரைனில் இடம்பெறும் மோதல்.

மேற்குலக நாடுகள் ரஸ்யாவிற்கு தோல்வியை ஏற்படுத்த விரும்புகின்றன மூலோபாய தோல்வியை ஏற்படுத்த முயல்கின்றன,

ஆனால் நாங்கள்  உக்ரைனின் கைப்பொம்மை ஆட்சியாளர்களையும் அவர்களது வெளிநாட்டு அனுசரணையாளர்களையும் தோற்கடிப்போம்.

இலங்கையை பொறுத்தவரை நாங்கள் இலங்கையர்களுக்கான கல்வி குறித்து பேசுகின்றோம்.

கேள்வி: கல்வி என்றால்…?

பதில்: ஆம், இராணுவத்தினருக்கு எனத் தெரிவிக்கலாம், மாணவர்களுக்கான கல்வி குறித்து நாங்கள் ஆராய்கின்றோம்  பொதுமக்களிற்கு மாத்திரமில்லை இராணுவத்தினருக்கும்.

கேள்வி: பாதுகாப்பு நோக்கில்  இலங்கை மூலோபாய ரீதியில் அமைந்துள்ளதை எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில்: இலங்கையின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மிகவும் முக்கியமானது. மேலும் உக்ரைன் தொடர்பில் இலங்கையின் சமநிலையான நடுநிலையான நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகின்றோம்.

மேற்குலகிடமிருந்து நீங்கள் அழுத்தங்களை எதிர்கொள்கின்ற போதும் நீங்கள் இந்த நடுநிலையான நிலைப்பாட்டை பேணவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் .

மேற்குடனும் கிழக்குடனும் இலங்கை சிறந்த உறவுகளைபேணவேண்டியது அவசியம்.

கேள்வி: இலங்கை ஜனாதிபதி இலங்கையின் வெளிவிவகார கொள்கை ஆசியாவை அடிப்படையாக கொண்டது எனத் தெரிவித்துள்ளார். ஆகவே ரஸ்யா இதனை எவ்வாறு பார்க்கின்றது?

பதில்: வரலாற்றுரீதியாக இலங்கை எங்களின் நெருங்கிய நண்பன் என்பதால் இது சாதகமான விடயம்.இலங்கையுடன் எங்களிற்கு எப்போதும் பிரச்சினைகள் இருந்ததில்லை,பல இலங்கையர்கள் ரஸ்ய முன்னாள் சோவியத்ஒன்றிய பல்கலைகழங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளனர்.நாங்கள் இது குறித்து பெருமிதம் கொள்கின்றோம்,அவர்கள் சமூகத்தில் முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்கள்.

ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேலும் உறவுகளை வலுப்படுத்துவதில் ஊக்குவிப்பதில் இது உதவியாக அமைந்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தின் அடிப்படையில் நாங்கள் மீண்டும் இலங்கையை பாராட்டுகின்றோம் இலங்கை நடுநிலைமையான  சமநிலையான நிலைப்பாட்டை பின்பற்றியுள்ளது .

ரஸ்யாவிற்கு எதிரான தடைகள் பயனற்றவை என்பதால் கொழும்பு தடைகள் விடயத்தில் மேற்குலகுடன் இணைந்துகொள்ளவில்லை.

கேள்வி – இரண்டு நாடுகளினதும் ஜனாதிபதிகள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

பதில்-பிஆர்ஐ உச்சிமாநாட்டின் போது இதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்தது,நான் அறிந்தவகையில் அவர்கள் கைகுலுக்குவதில் மாத்திரம் ஈடுபட்டனர் இரண்டு தலைவர்களும் மும்முரமாகயிருந்ததாலும் முன்கூட்டியே அவர்களது நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டதாலும் அவர்களால் கைகுலுக்கலிற்கு அப்பால் செல்ல முடியவில்லை.

அடுத்த முறை ஏதாவது ஒரு சர்வதேச மாநாட்டில் அவர்கள் சந்திக்கலாம்.

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக ரஸ்யா மாறியுள்ளது உங்களிற்கு தெரியும்,பிரிக்ஸ் பாரிய அமைப்பாக மாறியுள்ளது பல நாடுகள் அதில் தங்களை இணைந்துகொண்டுள்ளன.

கேள்வி- இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது உங்கள் கருத்து என்ன?

பதில்-இதில் எந்த பிரச்சினைகளும் உள்ளதாக நான் கருதவில்லை இதற்கான அளவுகோல்கள் உள்ளன இலங்கையை பொறுத்தவரை இது பிரச்சினையான விடயமல்ல பிரிக்சில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவை கொண்டுள்ளது.

கேள்வி: ரஸ்ய உக்ரைன் மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என கருதுகின்றீர்கள் ?

பதில்: ரஸ்யாவின் போர் திறமையை உக்ரைனின் போர்திறமையுடன் ஒப்பிடமுடியாது என்பதால் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தெரிவிக்க முடியாது .

மேற்குலகின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து சமாளிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் திறமைகள் குறைவடைந்தால் – அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்றால் ஐரோப்பா பொருளாதார பெரும்பிரச்சினைகள் எதிர்கொண்டால் ஜேர்மனியில் என்ன நடக்கின்றது என பாருங்கள் பணிப்பகிஸ்கரிப்புகள் இடம்பெறுகின்றன ஜேர்மனி உக்ரைனில் உள்ள கைப்பொம்மை அரசாங்கத்திற்கு பெருமளவு பணத்தை செலவிட்டது மக்கள் அதனால் வெறுப்படைந்துவிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.