பேராதனை பல்கலை விவசாய பீட பேராசிரியர் பீரிஸ் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதால் சாவு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை  உட்கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

விவசாய பீடத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் மனைவியுடன் வசித்து வந்த பேராசிரியர் திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விவசாய பீடத்தில் பயிர் விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய பேராசிரியர் பி.எல்.பீரிஸ் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக ஊடகப் பேச்சாளரும், பிரதி உபவேந்தருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

பேராசிரியரின் மனைவி பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தில் பணிபுரிவதோடு, மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான அறிக்கையை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.