பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் சில சரத்துகள் அரசமைப்புக்கு முரண்! மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றில் மனு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை  உயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் உள்ள விதிகள், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைக்க இராணுவம், பொலிஸார் மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளித்துள்ளதாக மனுதாரர் கர்தினால் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பில்  உறுதிப்படுத்தியுள்ள தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.