போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறித்த தகவல்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியால் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியின் தலைவராக செயற்படும் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 1927 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படை தளபதி மேலும் தெரிவிக்கையில் –

விஷத்தன்மையுடைய மற்றும் அபாயகரமான போதைப்பொருள்களை நாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் அவை விற்பனை செய்யப்படுதல் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காகவும், அதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கு இந்த செயலணி நிறுவப்பட்டது.

11 அமைச்சுக்கள் மற்றும் 14 திணைக்களங்கள் இந்த செயலணியில் அங்கத்தவர்களாக உள்ளன. அதற்கமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்துக்கு தகவல்களை வழங்க முடியும். இவ்வாறு தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.