செல்லக்கதிர்காமத்தில் விபத்து: ஒருவர் பலி ; 4 பேர் படு காயம்!

கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வான் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வானில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தநபர் வானில் பயணித்தவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.