வெளிநாட்டுக்கு சுற்றுலாவா? இலங்கைக்குச் செல்லுங்கள்! இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை

நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களிற்கான எனது ஆலோசனை என்னவென்றால் அடுத்தமுறை நீங்கள் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா செல்லவிரும்பினால் தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள் நான் உங்கள் அனைவருக்கும் இதனைத் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாகக் கருதுகின்றனர் பாராட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை ஏனைய உலகநாடுகள் கைவிட்டவேளை இலங்கைக்கு கரம் கொடுத்த நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன் எரிபொருள்வரிசைகளை நேரடியாகப் பார்த்துள்ளேன் உணவு அத்தியாவசியப்பொருள்களுக்கான பற்றாக்குறைகளை அவதானித்துள்ளேன் அவ்வேளையில் இலங்கைக்கு உதவமுன்வந்த ஒரேயொரு நாடு இந்தியா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியது அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் நீண்டநாள்களாகப் பேச்சுகளை மேற்கொண்டனர் அவர்களிற்கு முதலில் உதவிகள் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்தே கிடைத்திருக்கவேண்டும். ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி 3 பில்லியன் டொலர்களுக்குக் குறைவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் வழங்கியதை விட ஐம்பதுவீதம் அதிகமாக உடனடியாக இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.