கல்முனை இஸ்லாமாபாத் வித்தி பொங்கல் பெருவிழா நிகழ்வு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்லின சமய கலாசார நிகழ்வுகளை மாணவர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தும் எண்ணக்கருவிற்கமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவால் பொங்கல் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்க மற்றும் பரஸ்பர உறவுகளைப் பேணும் இந்தத் திட்டத்திற்கு ஆசிரியர் எம்.சீ.ஹிஜாஸ் அனுசரணை வழங்கியதோடு, இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டதோடு,  இதன் மூலம் மாணவர்களுக்கு மத்தியில் பல்லின சமய கலை, கலாசார பண்புகள் தொடர்பான சிறந்த மனப்பதிவுகளை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மக்களின் பண்பாடுகள் தொடர்பான சிறப்பம்சங்களை உணர்த்த முடிந்தமை இந்நிகழ்வின் வெற்றியாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.