நுவரெலியாவில் சில இடங்களில் பனிமூட்டம்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியாவில் காலை மற்றும் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

குறிப்பாக நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில் ருவான் எலியா, பிளாக்பூல் , வெண்டிகோனர் உள்ளிட்ட பகுதிகளிலும்  நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி , நுவரெலியா – பதுளை , நுவரெலியா -கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளிலும் அடிக்கடி கடும் பனி மூட்டம் காணப்படுவதால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை மிகவும் அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதான வீதிகளில் காணப்படும் கடும் பனி மூட்டம் காரணமாக வீதியோரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி சமிக்ஞைகள் எவையும் கண்ணுக்குத் தெரியாதவாறு பனியால் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது