கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி நடமாடும் கண்சோதனை

 

அபு அலா –

கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நலன் கருதி, கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்பரிசோதனை நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை கோபாலபுர முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தின் கண்பரிசோதனை வைத்தியர் ஆர்.அருன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடமாடும் கண்பரிசோதனையில் கண்பார்வை குறைபாடு, குறும்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் சம்பந்தப்பட்டவர்கள், தலைவலி மற்றும் கண்ணில் நீர் வடிதல், கண்கூச்சம் போன்ற கண்நோய் உள்ளவர்கள் தங்களின் கண்களை சிறந்த முறையில் பரிசோதனை செய்து கொண்டதுடன் அவர்களுக்கான மூக்குக்கண்ணாடியையும் பெற்றுக்கொண்டனர்.

குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களுக்கான கண்பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.