வேதத்தீவு ஆற்றுக்குக் குறுக்கே பாலம் அமைத்துத்தர கோரிக்கை

( மூதூர்  நிருபர்)

திருகோணமலை மாவட்ட  மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. சாபி நகர் கிராம சேவையாளர் பிரிவில்  வேதத்தீவு ஆற்றுக்குக்குறுக்கே பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இங்குள்ள பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் விவசாயிகளும் கடமையின்பொருட்டு  சென்றுவரவேண்டிய அரச ஊழியர்களும் தினமும்  வேதத்தீவு ஆற்றைக் கடந்தே  பயணம் செய்துவரவேண்டிய நிலையுள்ளதாகக் கூறுகின்றனர்.

சிறிய இழுவைப்படகே இந்த ஆற்றைக்  கடப்பதற்காக இங்கு  சேவையில் ஈடுபடுகின்றது.

இந்;த இழுவைப்படகில் சைக்கிளைத்; தவிர ஏனைய  வாகனங்களை ஏற்றிச்செல்லமுடியாதிருப்பதாகவும் கூறுகின்றார்கள்.
இதனால் பயணம் செய்யவேண்டிய  பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பயணம்  செய்யவேண்டிய ஏனையோர்களும் தினமும் ஆற்றைக்கடந்து பயணம் செய்வதில்  பெரிதும்  சிரமப்படுகின்றனர் எனக் கூறுகின்றனர்.

பயிர்ச்செய்கைக்காணிகள் ,தோட்டக்காணிகள்  வேதத்தீவுப்பகுதிகளில்  காணப்படுவதால்இங்குள்ள  விவசாயிகள், கால் நடையாளர்கள்  ஆகியோர்  அறுவடை மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளின்போது விவசாய  உபகரணங்களையும்  அறுவடைப்பொருள்களையும் கொண்டுசெல்வதிலும் தாம் பெரிதும்  சிரமப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

பாலம் அமைப்பதற்கான அடிக்கற்கள் அசியல் வாதிகளால் இங்கு நாட்டப்பட்டும் இன்னும் இதற்கான பாலம் இங்கு  அமைக்கப்படவில்லையென . மக்கள் ஆதங்கப்படுகின்றனர்
மாரி மழை காலத்தின்போதும்  இரவு வேளையிலும் ஆற்றைக்கடந்து பயணம் செய்வதில் பெரிதும் சிரமப்படுவதாகவும் உரிய நேரத்திற்கு நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும்   தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும் மக்கள்  கூறுகின்றனர். இதுகுறித்து உரிய பகுதியினர்   கவனம் செலுத்தவேண்டுமென   பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.