தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வுகள்

கிண்ணியா நிருபர்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த செயலமர்வை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட இலக்கியப் போட்டியினை முன்னிட்டு, தமிழ்மொழி மூலமான மாணவர்களுக்கான தமிழ் இலக்கண இலக்கியம் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் மொழி ஆளுமை, தமிழ் இலக்கண உச்சரிப்பு, கட்டுரை ஆக்கம் எழுதுதல் உள்ளிட்ட பல திறன்களை வளர்க்கவும் இச் செயலமர்வின் மூலமான வெளிப்பாடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வளவாளராக தமிழ் கற்கைகள் துறை மாணவன், கிழக்குப்பல்கலைக்கழகம் தி. முகிலன் அவர்கள் கலந்துகொண்டார்.

இச் செயலமர்வின் ஒருங்கிணைப்பாளராக திருமதி பாக்கியராஜா மேனகா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தம்பலகாமம்) உட்பட மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.