கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமாவுக்கு நற்சான்றிதழ்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வலயத்தில் கடந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய சித்தி வீதத்தை பெற்று முதலிடத்தில் சாதனை படைத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு சிறப்பு நற்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அச்சான்றிதழை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ். சஹதுல் நஜீம் பற்றிமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்டுக்கு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கடந்த வருடம் 2022(2023) இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றில் குறித்த பாடசாலை கல்முனை வலயத்தில் அதிகூடிய சித்தி வீதத்தைப் பெற்றதைப் பாராட்டும் வகையில் வலயக்கல்விப்பணிப்பாளரால் நற்சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
அதனையொட்டி பாடசாலை சமூகம் இவ்வெற்றிக்குப் பங்களிப்புச்செய்த அதிபர்,பிரதி அதிபர்கள்,உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள்,வகுப்பாசிரி