ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை சின்னப்பள்ளி வட்டாரம் 10 ஆம்  கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் கடந்த விpயாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், மத்திய குழுவின் செயலாளர் எம்.எஸ்.எம். அஸாறுடீன், சின்னப்பள்ளி வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.