மின்னல் தாக்கி ஒருவர் பலி !

 

எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிமலே, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்