102 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிக்க நடவடிக்கை!

102 தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக அதிபர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன குறிப்பிடுகின்றார்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

கடந்த காலங்களில் புதிதாக அதிபர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையில் தாமதம் நிலவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்