11 மாடுகளுடன் இருவர் கைது

அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு சென்ற 11 பசு மாடுகளை கொண்டு சென்ற இருவரை ஹட்டன் பொலிஸார் இன்று (11) காலை கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவை டின்சின் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தில் லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மாடுகளை வளர்ப்பதற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கும் பண்னையின் உரிமையாளர் பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்ததால் அனுமதிப்பத்திரத்தை வாங்கவில்லையென குறிப்பிட்டார்.

கைது செய்த மாடுகளோடு கன்றுக் குட்டிகளும் உள்ளமை குறிப்பிடதக்கது.

கைது செய்த சந்தேகநபரையும் லொறியையும் மற்றும் மாடுகளையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்