தாலி கழற்றுவதாய் தோன்றிய கனவு பலன் திருமணமாகாத பெண்ணுக்கு தோன்றினால் அதன் அர்த்தம் என்ன?

கனவின் பலன் :
கனவில் சில சமயம் தாலி போன்ற சமுதாய பிம்பங்கள் வருவதுண்டு. தாலி, மாலை, மோதிரம், மெட்டி, குங்குமம் போன்றவை நம் கலாசாரத்தில் திருமணத்தையும் திருமண வாழ்வையுமே குறிக்கும். இந்த கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு தாலி கழட்டி எறிவதைப் போன்ற கனவு வருவதன் பலன் என்ன? அது நல்லதா கெட்டதா?
பார்ப்போம் !
முதலில் குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் மன உளைச்சல்கள் உள்ளன. அதுதான் இந்த மாதிரி தாலி கழட்டி எறிவதாய் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பிட்ட பெண் திருமணம் மூலம் தனக்கு ஏதோ ஒரு ஆபத்து நிகழும் என அவரது உள்மன அளவில் நினைப்பதே இந்த கனவு வரக் காரணம். உள்மனம் சொல்வதை எப்போதும் நாம் சட்டென்று ஒதுக்கி விட முடியாது. நாம் ஏற்கனவே இந்தத் தொடரில் பார்த்தைப் போல , அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். அந்தப் பெண்ணின் உள்மனம் அந்தப் பெண்ணுக்கு இந்தக் கனவின் மூலம் ஏதோ ஒரு தகவலை சொல்ல நினைக்கிறது . அது என்ன?
அந்தப் பெண்ணுக்கு இப்போது அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து ஒளீந்திருக்கிறது. ஆகவே இப்போது திருமணம் வேண்டாம் என்று உள்மனம் கூறுகிறது. ஒரு ஆபத்திலிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற பார்க்கிறது. ஆகவே அந்தப் பெண் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. காதல் வயப்படாத பெண்ணாய் இருந்தால் எந்த காதல் வலையிலும் சிக்காமல் இருப்பது நல்லது. ஒரு ஆறு மாத காலம் பொறுங்கள். பின் இது மாதிரி கனவு வருகிறதா என பாருங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் அப்போது திருமணம் பற்றி யோசிக்கலாம்

2 கருத்துக்கள்

உங்கள் கருத்தை சொல்லுங்கள்