2022 குளிர்கால ஒலிம்பிக் பீஜிங்கில்

2022-ஆம் ஆண்டு குளிர்­கால ஒலிம்பிக் போட்­டி­களை எங்கே நடத்து­வது என்­பது தொடர்­பாக மலே­சிய தலை­நகர் கோலா­லம்­பூரில் நேற்று நடை­பெற்ற இரக­சிய வாக்­கெ­டுப்பில் அந்த அதிர்ஷ்டம் சீன தலை­நகர் பீஜிங்­குக்கு கிடைத்­துள்­ளது.
ரஷ்­யாவின் சோச்சி நகரில் கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 7-ஆம் திகதி தொடங்­கிய குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்­டிகள் அம்­மாதம் 23-ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்­தது. சுமார் 50 பில்­லியன் யூரோக்கள் செலவில் வெகு பிர­மாண்­ட­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த விளை­யாட்டு போட்­டிகள் தொடர்ந்து 16 நாட்கள் நடை­பெற்­றன. 2900 வீரர் -­வீ­ராங்­க­னைகள் இந்த குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்­டு­களில் போட்­டி­யிட்­டனர்.

இந்த போட்­டி­களை நடத்­திய ரஷ்யா அதிக பதக்­கங்­களை வென்று பட்­டி­யலில் முத­லிடம் பெற்­றது. 13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்­கலம் என மொத்தம் 33 பதக்­கங்­களை ரஷ்யா வென்றது.
மிகுந்த எதிர்­பார்ப்­புடன் கள­மி­றங்­கிய அமெ­ரிக்க விளை­யாட்டு வீரர்-­ வீ­ராங்­க­னைகள் பெரி­தாக சோபிக்க முடி­யாமல் நோர்வே மற்றும் கன­டா­வுக்கு அடுத்த மூன்­றா­வது இடத்­தையே பிடிக்க முடிந்­தது. இந்­நி­லையில், தென் கொரி­யாவில் 2018ஆம் ஆண்டு இந்த போட்டி நடை­பெற்று 4 ஆண்­டு­க­ளுக்கு பிறகு நடை­பெறும் 2022- குளிர்­கால ஒலிம்பிக் போட்­டியை எங்கே நடத்­து­வது என சர்­வ­தேச ஒலிம்பிக் சங்கம் ஆலோ­சனை நடத்தி வந்­தது.

இதற்­காக, கஸ­கஸ்தான் நாட்டில் உள்ள அல்­மாட்டி நகரம் உள்­ளிட்ட உலகின் சில முக்­கிய நக­ரங்கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன. மலே­சிய தலை­ நகர் கோலா­லம்­பூரில் இது­தொ­டர்­பாக நேற்று சர்­வ­தேச ஒலிம்பிக் சங்கத்தின் பிர­தி­நி­திகள் இரக­சிய வாக்­கெ­டுப்பில் கலந்து கொண்­டனர்.

இதில் அல்­மாட்டி நகரை பின்­னுக்கு தள்ளி 2022 ஆம் ஆண்டு குளிர்­கால ஒலிம்பிக் போட்­டியை நடத்தும் வாய்ப்பை சீன தலை­நகர் பீஜிங் நகரம் பெற்றுக்கொண்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்