11 நாட்கள் மூடப்படுகிறது கோள் மண்டலம்

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள கோள்மண்டலம் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 11 நாட்களுக்கு மூடப்படும் என தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கோள்மண்டலத்தில் செய்யப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 25ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 4ம் திகதிவரையான 11 நாட்கள் கோள்மண்டலத்தை பார்வையிட முடியாது.

செப்டெம்பர் 5ம் திகதி கோள்மண்டலம் மீள திறக்கப்படும் என தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்