எங்­க­ளுக்கு விமான நிலையம் வேண்­டாம்! சொந்த நிலங்­­களைத் திருப்பி தாருங்­கள்:-வலி இடம்­பெயர் மக்­கள் கோரிக்கை

எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். 25 வருடங்க ளுக்கு முன்னர் கொடுத்த அரை நிரந்தர வீட்டில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எமக்கு துறைமுகம் வேண்டாம்; விமான நிலையம் வேண்டாம். எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம் என்று வலி., வடக்கில் இடம்­பெ­யர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்­த­னர்.

மருதனார் மடம் சபாபதிப்பிள்ளை நலன் புரி நிலையத்திற்கு நேற்­று வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைனிடமே மக்கள் இவ்­வாறு மன்றாட்­ட­மாக கோரிக்கை விடுத்­தனர்.

நேற்­றைய தினம் யாழ்.வந்த மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி நலன்புரி நிலையத்திற்கு நண்பகல் 12 மணியளவில் விஜயம் மேற்கொண்டு மக்களுடைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்­த­து­டன் மக்களுடைய வீடுகளுக்குள்ளும் சென்று மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மக்கள் தெரிவிக்கையில்

எங்களுடைய சொந்த நிலங்களில் மிக சிறப்பாக வாழ்ந்த நாங்கள் தொழில், சுயமரியாதை, வீடுகள், காணிகள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் 25 வருடங்களாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம்.எமக்கு எங்களுடைய சொந்த நிலங்களே வேண்டும். இந்த நிலையில் இப்போ து எங்களுடைய நிலங்களை எடுத்து விமான நிலையம் அமைக்கப்போவதாகவும், துறைமுக ம் அமைக்கப்போவதாகவும் கூறுகின்றார்கள்.

எமக்கு விமான நிலையமும் வேண்டாம், துறைமுகமும் வேண்டாம். எங்களுடைய சொந்த நிலங்களே வேண்டும். எங்களுடைய சொந்த நிலங்களை எங்களுக்கு கொடுங்கள். என கேட்டுக் கொண்டனர். என்று தெரி­வித்­த­னர். குறிப்பாக வயதான பெண்கள் கண்ணீர்மல்க தங்களுடைய நிலங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுத்­தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கங்களை செவிமடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் குறிப்பிடுகையில் இடம்பெயர்ந்து வாழும் இங்குள்ள மக்களில் குறிப்பாக நீங்கள் தொடர்ந்து பல துன்பங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளதை நான் உணர்கின்றேன். உங்களுடைய பிரச்சினைகளை இங்குவரும் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நீங்கள் களைப்படைந்து போயிருப்பீர்கள்.

எனவே உங்களுடைய இப்பிரச்சினைகளுக்கு உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன் .
வடக்கிற்கான விஜயத்தை நான் மீண்டும் மேற்கொள்ளும்போது தற்‌போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள அனைவரும் உங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதுவே எனது விருப்பமும் ஆகும் என்றார்.

வடக்குக்கு நேற்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஹுசேன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆளுனர் பளிஹக்கார மற்றும் வட மாகாண அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.அத்துடன் காணாமல் போனோரின் உறவினர்களையும் சந்தித்த செய்ட் அல் ஹுசேன் அவர்களுடன் ஒருசில வார்த்தைகள் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்