தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாது: மருத்துவ உலகின் சாதனை

தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV வைரஸ் தொற்றினை தடுக்கும் முயற்சியில் தாய்லாந்து வெற்றிகண்டுள்ளது.

உலகிலேயே கொடிய நோய்களில் ஒன்று HIV, பாதுகாப்பற்ற உறவு, அசுத்தமான ஊசிகள் உட்பட பல்வேறு காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு HIV இருந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பரவக்கூடும்.

இதனை சிகிச்சைகளின் மூலம் சரி செய்து ஆசிய நாடான தாய்லாந்து வெற்றி கண்டுள்ளது.

எய்ட்ஸ் நோயற்ற தலைமுறையை உருவாக்குவதே தாய்லாந்து, தன்னுடைய நோக்கமாக கொண்டு செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவும் ஆபத்து ஒரு சதவீதமாக குறைகிறது.

ஒருவேளை மருந்துகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவ 45 சதவீதம் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்