ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: கருணாநிதி

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவலாக உள்ளனர் என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில், ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக ‘லோக் ஆயுக்தா’வின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, ‘பண பலமும், செல்வாக்கும் இருந்தால், எவரும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து விடலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

அது தனக்கும் உடன்பாடான கருத்து தான் என கூறியுள்ளார்.

அவரது கருத்து,உச்ச நீதிமன்றத்துக்கு எச்சரிக்கை என கருதுகிறேன். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை, இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்