இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவன்…

” ஹெல்ப் மீ , ஐ வாண்ட் லைவ் ” இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் உதவிக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளான்.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரை சேர்ந்தவன் அன்ஷ் உப்ரிடி (வயது 11). இவன் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். தற்போது ஜெய்ப்பூரிலுள்ள பஹ்வான் மகாவீர் என்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளான். அதில் சிகிச்சைக்காக என் பெற்றோர் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற நிதியுதவி கோரி உள்ளேன். மேலும் சிகிச்சை செலவு செய்ய முடியாத நிலையில் தான் தற்போது உள்ளேன். சிகிச்சையைத் தொடர தாங்கள் உதவி வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதி உள்ளான்.

மேலும் உத்திரப் பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் உதவிக்கோரி அந்த சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

சமீபத்தில் புனேவைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இதய அறுவை சிகிச்சைக்கான உதவியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்