சென்னை தனியார் கல்லூரியில் ரத்த தான முகாம் (Photos)

சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் அருகே உள்ள ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரி வளாகத்தில், நிர்வாகத்தின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) ரத்த தான முகாம் நடைபெற்றது.

அப்போது, பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் முன்வந்து ரத்த தானம் செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, எழும்பூர் அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனை குழுவினர் ரத்தங்களை சேகரித்துச் சென்றனர்.

ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட(என்எஸ்எஸ்) அதிகாரியும், தமிழ் பேராசிரியருமான பி.ரமேஷ் குமார் தலைமையில், ரத்த தான முகாமுக்குத் தேவையான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர்.

-மணிகண்டன்

1e0a9de6-b789-4b15-aeb4-f3a83c2458c6

e345279d-0c86-4105-9dbb-339377fe18b7

dd06d8fb-923a-43b0-89c6-100b3aca1dc6

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்