காலி முகத்திடலில் உலகிலேயே அதி உயர்ந்த நத்தார் மரம் (Photos)

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாக்கும் தேசத்தினை கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். தங்கள் நலன்களை பற்றி மாத்திரம் சிந்திக்கின்ற அரசியலை நிறுத்தி சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.

உலகில் அதியுயர்ந்த நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். அர்ஜீன ரணதுங்க சமூக நலன் அமைப்பினால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்நிகழ்வு இன்று (18) காலை காலிமுகதிடலில் இடம்பெற்றது.

தற்சமயம் மெக்ஸிகோ நாட்டிலேயே உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் 295 அடிகளாகும். இவ்வுலகச் சாதணையினை முறையடித்து உலகிலுள்ள அதியுயர்ந்த நத்தார் மரத்தை காலிமுக திடலில் நிர்மாணிப்பதே அர்ஜீன ரணதுங்க சமூக நலன் அமைப்பின் பிரதான நோக்கமாகும். இந்நிர்மாணப் பணிகளின் பொருட்டு முதல் மண் வெட்டும் நிகழ்வு இன்று காலை 10.07 சுபவேளையிற்கு அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவின் கரங்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பொழுது சர்வமத வழிப்பாடுகளிற்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துரைத்த அமைச்சர் அர்ஜீன ரணதுங்க மேலும் குறிப்பிட்டதாவது ஒரு சில அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்திற்காக சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள்.

‘அடுத்த தலைமுறைக்கு இந்நாட்டினை கையளிக்கும் பொழுது இனங்களிற்கிடையேயுள்ள பிரச்சினைகள் தீர்கப்பட்டிருக்க வேண்டும். சமய பிரச்சினைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இன்று எங்கள் நாட்டிலுள்ள மஹாநாயக்க தேரோக்கள் குருவானவர்கள் மௌலவிகள் மற்றும் இந்து குருக்கள் ஒன்றினைந்து தங்களுடைய மதங்கள் தொடர்பாக கதைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பௌத்த நாடென்ற வகையில் பிற மத தலைவர்கள் பௌத்த மதத்தினை பாதுகாப்பதற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள்.

விசேடமாக பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென கர்தினால் அண்மையில் தெரிவித்தார். இவ்வாறனதொரு சமய தலைவர் இந்நாட்டில் வாழ்கையில் அரசியல் தலைவர்கள் இதனைக் காட்டிலும் மிக அறிவுப்பூர்வமாக செயற்பட வேண்டும்.

சமயம் இனத்தை விற்று தங்களுடைய நலன்களை பேணுவதற்கு பாரளுமன்றிலுள்ள ஒரு சில உறுப்பினர்களிற்கு நான் கூறவிரும்புவது யாதெனில் இந்நாடுடன் விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும். இன்று எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிகரமான பயணமொன்றை மேற்கொள்வதற்கு சந்தர்பம்கிட்டியுள்ளதென…’ அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகிலுள்ள மிக உயர்ந்த நத்தார் மரத்தின் பொருட்டு பிரதான அனுசரணையாளராக இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் பௌத்த சங்கமாகும். சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாக்கும் மிக உயரமான நத்தார் மரம் எதிர்வரும் மார்கழி மாதம் 24ம் திகதி திறந்துவைக்கப்படுமென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க சமூக நலன் மன்றம் தெரிவித்தது.

7d0341d4-4a62-4af1-8a93-9e65f0369c4b

e26ede33-dc5e-4224-83f1-0088528dc706

e76aae4d-84a1-4cb9-ac13-106470805699

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்