மன்னார் பேசாலை பங்கில் 86 மாணவ மாணவிகளுக்கு முதல் நன்மை எனும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு (Photos)

மன்னார் மறை மாவட்டம் பேசாலை பங்கைச் சேர்ந்த 86 மாணவ மாணவிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(28) பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் முதல் நன்மை எனும் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது.

முதல் நன்மைக் கொண்டாட்ட திருப்பலி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தை பெனோ அலெக்சாண்டர்   சில்வா தலைமயில் இடம் பெற்றது.

இதன் போது அருட்தந்தையர்களான  அருட்பணி. ஜே.டெனிஸ் குரூஸ் , அருட்பணி என்.பெயிலன் குரூஸ் ஆகியேர் இணைந்து முதல் நன்மை திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இதன் போது பேசாலை பங்கைச் சேர்ந்த 86 மாணவ மாணவிகளுக்கு முதல் நன்மை எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டதோடு,சான்றுதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது மாணவர்களின் பெற்றோர், அருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

s1
s2
s3
s4
s5
s6
s7
s8
s9

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்