சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நொச்சிக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலயத் திறப்பு விழா(படம்)

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் நொச்சிக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலயத் திறப்பு விழா நேற்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில்  அபிசேகம் செய்யப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
DSC_0002 DSC_0005
குறித்த நிகழ்வில் நொச்சிக்குளம் பங்குத்தந்தை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரீமூஸ் சிறாய்வா,நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
DSC_0006 DSC_0023 DSC_0044
ஆலயத்திறப்பு விழாவினை தொடர்ந்து முதல் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
பின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
DSC_0058 DSC_0065 DSC_0075

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்