குஞ்சுக்குளம் நுழைவாயிலை திறந்து வைத்தார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை(photo)

மன்னார்-மதவாச்சி பிரதான வீதில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் நேற்று புதன் கிழமை(14) மாலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குஞ்சுக்குளம் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் திறப்பு நிகழ்வு,குஞ்சுக்களம் பங்குத்தந்தை அருட்தந்தை இ.அன்ரனி சோசை தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடள் இணைந்த அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா,மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி,கிராம மக்கள்,கிராம அலுவலகர் ஆகியோர் இணைந்து குறித்த நுழைவாயிலை வைபவ ரீதியாக திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.
unnamed-1-copy unnamed-2-copy unnamed-3-copy unnamed-4-copy unnamed-5-copy unnamed-6-copy unnamed-7-copy unnamed-8-copy unnamed-copy
மன்னார் நிருபர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்