மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னையின் 208 ஆவது வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த திருவிழா ஆலய பிராத்தனையினைத் தொடர்ந்து இன்று வௌ்ளிக்கிழமை 16ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது, தொடர்ந்து இன்றைய நவநாள் பூசைகள் அருட்தந்தை அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் (ஜே.டி.எச்) அவர்களினால் பூசைகள் இடம்பெற்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இன்றையதினம் 1ம் நாள் இடம்பெற்ற விழாவினை லூர்து மாதா குழுவினர்களின் ஏற்பாடு செய்து நடாத்தி சிறப்பித்தனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை அன்னையின் வீதி வலம் வருகை இடம்பெற்று, 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு திருநாள் கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜேசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு விழா நிறைவுபெறும்.

செய்தியாளர்
எஸ்.சதீஸ்

fg1

fg10

fg2

fg3

fg4

fg5

fg6

fg7

fg8

fg9

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்