கரையோர பாதுகாப்பு வார நிகழ்வுகளில் துறைமுக ஊழியர்கள் பங்குக்கொண்டார்கள்.

கரையோர பாதுகாப்பு வார நிகழ்வுகளில் இலங்கை துறைமுக அதிகாரச் சபை ஊழியர்கள் இன்று (22) கலந்துக்கொண்டார்கள். காலிமுகதிடலின் கரையோர சுத்திகரிப்பு நிகழ்வு இன்று நடைப்பெற்றது. கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவின் வழிக்காட்டல்களிற்கமைவாக ஒழுங்குச்செய்யப்பட்ட இந்நிகழ்வினை இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் சமூக நலன் பேணும் அமைப்பு ஏற்பாடுச்செய்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கரையோர பாதுகாப்பு நிகழ்வின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு ஏற்பாடுச்செய்யப்பட்டது.
சர்வதேச கரையோரத்தினை சுத்தப்படுத்தும் பணிகள் 1986 ஆண்டு டெக்சஸ் மாநிலத்தின் தொண்டர்களினால் கரையோரத்தை சுத்தப்படுத்துவதன் மூலமாக முதன்முறையாக இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அந்நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச கரையோர சுத்தப்படுத்தும் நிகழ்விற்கு அமைவாக இலங்கையிலும் பல வேலைத்திட்டங்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டல்களின் கீழ் ஜனாதபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. காலிமுகதிடலை சுத்தப்படுத்தும் பணிகளில் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் 250 ஊழியர்கள் கலந்துக்கொண்டார்கள்.
unnamed-copy unnamed-17-copy unnamed-3-copy unnamed-2-copy unnamed-1-copy

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்