உதைபந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒத்திவைப்பு

மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டம் சம்மந்தமாக அண்மையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயுமுகமாகவும், அவற்றினை நிவர்த்திசெய்யும் நோக்கோடும், அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் 02.10.2016 அன்று மதியம் 12.00 மணியளவில் கச்சேரி ஜெயக்கா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  விசேட கலந்துரையாடலானது, அன்றைய தினம் தேசியமட்ட போட்டி ஒன்று நடைபெறவிருப்பதனாலும், அதில் அனைத்து விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ள வேண்டியிருப்பதனாலும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றது என்பதனையும் அதற்க்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதனையும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்