வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!(photos)

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்  16/10/2016 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.
 கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத்வேகத்துடன் கல்லூரியை  முன்னணிப் பாதையில் கொண்டுசெல்ல அமைதியான முறையிலும், ஆக்கபூர்வமான கருத்துக்களுடனும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையில் தலைவராக கல்லூரி அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் அவர்களும், உப தலைவராக  திரு எல்.சுரேந்திரசேகரன்  , செயலாளராக திரு எஸ்.சுரேந்தர், பொருளாளராக திரு ரி.கார்த்திக், இணைச் செயலாளராக  செல்வி எ.திபியா, உப செயலாளராக  திரு சாய் பிரசாத் அவர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 14 பேரும், பிரிவு இணைப்பாளர்களாக 04 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
unnamed-1-copy unnamed-2-copy unnamed-3-copy unnamed-4-copy unnamed-5-copy unnamed-6-copy unnamed-copy

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்