இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் மூன்று பிரகடனங்கள் நிறைவேற்றம்!

மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் மூன்று பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் முன்னோடியான மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் இப்பிரகடனம் வாசிக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பீடம் நிறுவப்பட்டிருப்பது போன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் அத்தகைய பீடம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்க அனுசரணையில் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினால் வருடாந்தம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடப் புத்தகங்களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்புகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
இவையே அங்கு நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களாகும்.
unnamed-10 unnamed-11
(அஸ்லம் எஸ்.மௌலானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்