சிரார்த்த தின நிகழ்வு

unnamed

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாகபத் தலைவரும், மூத்த தொழிற்சங்கவாதியுமான வீ.கே.வௌ்ளையன் என்பவரின் சிரார்த்த தினம் அட்டன்-டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகே தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் 02.12.2016 அன்று நடைபெறும்.

மேலும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை வென்றெடுத்த இவரது 40ஆவது வருட சிரார்த்த தினத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த பொகவந்தலாவை முத்துலெட்சுமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு நூலகத் திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறும்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் ம.திலகராஜின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்