லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டம்

 

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டமொன்று 01.12.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது.

லகஷ்பான மின்சாரசபை பிரதி பொது முகாமையாளர் கரியாலயத்தின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்ப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் இணைந்து தொழிசங்க முன்னனியினால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்பாட்டத்தில்  2015 ஏற்படுத்திய  சப்பள முரண்பாட்டினை  தீர்கக்கோரியும்,  பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகள் ஏந்தியவாறும், கோஷம் எழுப்பியவாறும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் 1 மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, அதன்பின் ஊழியர்கள் தமது  கடமைகளுக்கு சென்றனர்.

unnamed-1-copy unnamed-2-copy unnamed-3-copy unnamed-copy

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்