கிளிநொச்சி பெரியபரந்தன் முகவரியாக கொண்ட சுரேஸ்குமார் விசாலினி என்ற மாணவிக்கு துவிசக்கரவண்டி

எமது ஈழ உறவான தெல்லிப்பளை சேர்ந்த நர்மதன் அவர்களால் தனது தாயார் அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவு(16.12.2016) தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பெரியபரந்தன் முகவரியாக கொண்ட சுரேஸ்குமார் விசாலினி என்ற மாணவிக்கு துவிசக்கரவண்டி அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.
மேற்படி விண்ணப்பம் சுரேஸ்குமார் என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இவ் துவிசக்கரவண்டி அவரது மகளான சுரேஸ்குமார் விசாலினிக்கு அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவாக வழங்கபட்டது. சுரேஸ்குமார் கடந்தகால யத்தத்தின்போது தனது கால் ஒன்றை இழந்துள்ளார்.
மேற்படி கைங்கரியத்தை செய்ய முன்வந்த நர்மதன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் சுரேஸ்குமார் அவர்களின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் அருந்தவராசா கௌரிதேவியின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்